அமெரிக்காவில் எச்1பி விசாவில் முக்கியமான மாற்றங்கள் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு

எச்1பி விசாவில் முக்கியமான மாற்றங்களை செய்ய இருப்பதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அமெரிக்காவில் எச்1பி விசாவில் முக்கியமான மாற்றங்கள் செய்ய டிரம்ப் நிர்வாகம் முடிவு
Published on

வாஷிங்டன்

வெளிநாட்டவர்கள் அமெரிக்காவில் தங்கி பணிபுரிவதற்காக வழங்கப்படும் எச்1பி விசா முறையால், இந்திய நிறுவனங்கள் பெருமளவில் பயனடைகின்றன.

இந்நிலையில், எச்1பி விசா பெறுவதற்கான வரையறைகளை, அமெரிக்க குடிபெயர்வுத்துறை மாற்றியமைக்கப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறந்த மற்றும் மிகத்திறமையான வெளிநாட்டவர்கள் எச்1பி விசா பெறும் வகையிலும், அமெரிக்க பணியாளர்கள் மற்றும் ஊதிய விகிதத்தை பாதுகாக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாக, உள்நாட்டுப் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.

அமெரிக்காவில் செயல்படும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்பத்துறையில் இந்திய வம்சாவளி அமெரிக்கர்களால் பெரும்பாலும் நடத்தப்படும் சிறிய, நடுத்தர ஒப்பந்த நிறுவனங்கள் இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதுபோல் எச்-4 விசாக்களை அகற்றுவதற்காக டிரம்ப் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com