

ஜெருசலேம்,
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் மகள் இவாங்காவின் கணவர் ஜாரெட் குஷ்னெர். இவர் டிரம்பின் மூத்த ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், பாலஸ்தீனிய நாட்டில் இருந்து வெளிவரும் அல் குட்ஸ் என்ற செய்தி நிறுவனத்திற்கு குஷ்னெர் பேட்டி அளித்து உள்ளார். அந்த பேட்டியின் தலைப்பு, அதிபர் அப்பாஸ் விரும்பினால் அவருடன் இணைந்து பணியாற்ற நான் தயார் என உள்ளது. அவரது பேட்டி அரபு மொழியில் வெளியாகி உள்ளது.
அவர் பாலஸ்தீனிய மக்களுக்கு விடுத்துள்ள நேரடியான செய்தியில், பிரகாசம் நிறைந்த எதிர்காலம் அமைவதற்கு நீங்கள் தகுதியானவர்கள். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகிய இரு நாட்டு மக்களும் தங்களது தலைமையை வலிமைப்படுத்தும் நேரமிது.
ஒரு தீர்வை நோக்கிய விசயத்தில் கவனம் செலுத்துவதற்கு ஊக்கமளிக்க வேண்டிய நேரமிது. இந்த முயற்சிக்கு அச்சப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.