

வாஷிங்டன்,
ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையேயான அணு ஆயுத பேச்சுவார்த்தையில் முன்னேற் றம் ஏற்படாத நிலையில், அந்த நாட்டின் மீது கடந்த 28-ந் தேதி அமெரிக்கா திடீர் தாக்கு தலை நடத்தியது.
இஸ்ரேலுடன் சேர்ந்து நடத்திய இந்த ராணுவ அதிரடியில் ஈரானின் உச்சபட்ச தலைவர் அய துல்லா அலி காமேனி கொல்லப்பட்டார். இதனால் வெகுண்டெழுந்த ஈரான், இஸ்ரேலையும், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க படைத்தளங்களையும் தாக்கி வருகிறது.
வளைகுடா பிராந்தியம் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகையும் உலுக்கி வரும் இந்த போர், நேற்றுடன் ஒருவாரத்தை நிறைவு செய்து விட்டது. 8-வது நாளான இன்றும் இரு தரப்பும் தாக்குதலை தீவிரப்படுத்தி இருக்கின்றன.
இந் நிலையில், ஈரான் மீதான தாக்குதலை நம்ப முடியாத வகையில் அதிகரிக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்து உள்ளது.
ஈரான் மீது இன்று அமெரிக்க படைகள் மிகக் கடுமையான தாக்குதல் நடத்தும் என ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்குப் பிறகு மத்திய கிழக்கு நாடுகளிடம் ஈரான் சரணடைந்துள்ளது. அரபு நாடுகளை இனி தாக்க மாட்டோம் என்ற ஈரான் அறிவிப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் எதிர்வினை ஆற்றி உள்ளார். இதனிடையே மத்திய கிழக்கு பகுதிக்கு அமெரிக்கா மேலும் ஒரு மிகப்பெரிய போர்க்கப்பலை அனுப்பி உள்ளது.