காசாவில் போர் நிறுத்தம் செய்ய டிரம்ப் அழைப்பு

காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
காசாவில் போர் நிறுத்தம் செய்ய டிரம்ப் அழைப்பு
Published on

டெல் அவிவ்,

ஈரானுடன் போர் நிறுத்தம் ஏற்பட்டு விட்டதால், இஸ்ரேல், தனது கவனத்தை காசா பக்கம் திருப்பி உள்ளது. வடக்கு காசாவில் வசிக்கும் பாலஸ்தீனியர்கள் உடனடியாக மொத்தமாக அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் ஹமாஸ் இயக்கத்தினர் மீது மிகப்பெரிய தாக்குதலை தொடங்க இருப்பது தெளிவாகிறது.

இந்த பின்னணியில், காசாவில் போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். ஹமாஸ் இயக்கத்தினரின் பிடியில் உள்ள பணயக்கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். டிரம்ப் பதவியேற்றவுடன் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே 8 வார கால போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து, மீண்டும் சண்டை தொடங்கியது. இருதரப்புக்கும் இடையே போர் நிறுத்தம் கொண்டுவர டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சி வெற்றிபெறவில்லை. இதற்கிடையே, வரும் வாரங்களில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமெரிக்கா செல்வார் என்று இஸ்ரேல் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

எனவே, போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்த பின்னணியில், பெஞ்சமின் நெதன்யாகு மீதான ஊழல் வழக்கு விசாரணைக்கு டிரம்ப் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com