அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் ஹார்முஸ் ஜலசந்தி உள்ளது: அமெரிக்க அதிபர் டிரம்ப்

கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சாதனை அளவிலான எண்ணெயை நாங்கள் கொண்டு வந்தோம். எங்களது கடற்படை அங்கு முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்முஸ்
Published on: 

அமெரிக்க கடற்படை ஹார்முஸ் ஜலசந்தியை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்கா - ஈரான் இடையே போர் பதற்றம் தொடர்ந்து நீடித்து வரும் நிலையில், உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றுள்ளது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் டிரம்ப் கூறியதாவது:

கடந்த வாரம் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சாதனை அளவிலான எண்ணெயை நாங்கள் கொண்டு வந்தோம். எங்களது கடற்படை அங்கு முற்றுகையை ஏற்படுத்தியுள்ளது. ஹார்முஸ் ஜலசந்தி மீது அமெரிக்காவுக்கு முழுமையான கட்டுப்பாடு உள்ளது.ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களை வைத்திருக்க அமெரிக்கா அனுமதிக்காது. அந்த நாடு அணு ஆயுதங்களை உருவாக்குவதையும், கதிரியக்கப் பொருட்கள் அடங்கிய டர்ட்டி பாம் தயாரிப்பதையும் தடுத்து நிறுத்துவோம்.ஈரான் எங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள விரும்புகிறது. ஆனால், அமெரிக்காவுக்கு ஏற்ற வகையிலான ஒப்பந்தத்தை ஏற்க மறுக்கிறது. போலியான ஒப்பந்தத்தை நாங்கள் விரும்பவில்லை. உண்மையான ஒப்பந்தத்தையே விரும்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

மேலும், ஈரானுடனான பேச்சுவார்த்தையின் முடிவைப் பொறுத்தே பெட்ரோல் விலையும் அமையும் என்று டிரம்ப் குறிப்பிட்டார்.இதற்கிடையே, ஹார்முஸ் ஜலசந்தி வழியாகச் செல்லும் அனைத்து கப்பல்களும் ஈரான் நிர்ணயித்துள்ள நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், இல்லையெனில் தாக்குதலுக்கு உள்ளாக நேரிடும் என்றும் ஈரான் அதிகாரிகள் எச்சரித்து வருகின்றனர்

X