

வாஷிங்டன்,
ஈரான் மீது இஸ்ரேலுடன் இணைந்து கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அமெரிக்கா போர் தாக்குதலை தொடங்கிய ஈரான் ராணுவம், வளைகுடா பகுதியில் உள்ள அண்டை நாடுகளான சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், ஓமன், கத்தார் உள்ளிட்ட நாடுகளில் உள்ள விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தியது.
சுமார் ஒரு மாதத்துக்கும் மேலாக நீடித்த கடுமையான போர் தாக்குதல் காரணமாக உலகளவில் கடும் எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதற்கிடையே போரை நிறுத்த ஈரான் உடனான அமெரிக்காவின் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனை தொடர்ந்து உலக நாடுகளின் அழுத்தம் காரணமாக போரை காலவரையின்றி நிறுத்துவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார்.
வாஷிங்டனில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ஈரான் உடனான போரை 3 வாரத்துக்குள் முழுவதுமாக முடிக்க உள்ளதாக டிரம்ப் பேட்டியளித்தார். இதனிடையே அமெரிக்க உள்துறை மந்திரி மார்க் ரூபியோ, ஈரானில் வேண்டிய இலக்குகளை அடைந்துவிட்டோம் எனவும் போர் நிரந்தரமாக முடிக்கப்படும் என தெரிவித்தார். இதற்கிடைய டிரம்ப் 2 நாள் பயணமாக சீனாவுக்கு செல்ல இருக்கிறார். வருகிற 14 மற்றும் 15-ந்தேதி பீஜிங்கில் வைத்து அந்த நாட்டின் அதிபர் ஜின் பிங்கை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
இந்தநிலையில், போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்கா முன்வைத்த புதிய திட்டத்தைத் தீவிரமாக பரிசீலித்து வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே மோதல்களை முடிவுக்கு கொண்டுவர புதிய அமைதி ஒப்பந்தம் பரிசீலனை செய்து வருவதாகவும் கடந்த 24 மணிநேரத்தில் பேச்சுவார்த்தை முன்னேற்றம் அடைந்துள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். விரைவில் உடன்பாடு ஏற்படுவது மிகவும் சாத்தியம் என்று நம்புவதாக டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். பொருளாதாரத் தடைகளை நீக்கவும், அணுசக்தி நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாக கூறப்படுகிறது. முதற்கட்டமாக ஒரு பக்க அளவிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் எட்டுவதில் இருதரப்பும் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.