மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்பு

மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம் தொடர்பாக அமெரிக்காவில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
மெக்சிகோ எல்லை சுவர் விவகாரம்: அமெரிக்காவில் அவசரநிலை அறிவிப்பு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகள் நுழைவதை தடுக்கும் விதமாக மெக்சிகோ எல்லையில் பிரமாண்ட சுவர் எழுப்ப உள்நாட்டு நிதியில் 5.7 பில்லியன் டாலர் (சுமார் ரூ.40 ஆயிரம் கோடி) ஒதுக்கும்படி ஜனாதிபதி டிரம்ப் அமெரிக்க நாடாளுமன்றத்தை வலியுறுத்தினார்.

இதற்கு எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் நாடாளுமன்றத்தில் செலவின மசோதா நிறைவேறாமல் போனது. இதன் காரணமாக பல்வேறு அரசுத்துறைகள் 4 வாரங்களுக்கும் மேலாக முடங்கின.

பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பின் அரசுத்துறைகள் முடக்கம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. எனினும் மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்பும் முடிவில் டிரம்ப் தீர்க்கமாக உள்ளார்.

இதனால் அங்கு மீண்டும் அரசுத்துறைகள் முடக்கம் வரலாம் என எதிர்பார்ப்புகள் நிலவியது. இந்த நிலையில் மெக்சிகோ எல்லைச் சுவருக்கான நிதியை பெறுவதற்காக டிரம்ப், நாட்டில் அவசர நிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கடந்த 1976-ம் ஆண்டில் இருந்து அமெரிக்காவில் இதுவரை 60 முறை தேசிய அளவில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com