பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனா மரணங்களை உயர்த்தி காட்டும் அமெரிக்க டாக்டர்கள் - டிரம்ப் குற்றச்சாட்டு

பணத்திற்காக அமெரிக்க மருத்துவர்கள் கொரோனா மரணங்களை உயர்த்தியதாக ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பணத்திற்கு ஆசைப்பட்டு கொரோனா மரணங்களை உயர்த்தி காட்டும் அமெரிக்க டாக்டர்கள் - டிரம்ப் குற்றச்சாட்டு
Published on

வாஷிங்டன்

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கூறியதாவது:-

அமெரிக்காவில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறுதி நாட்களில் உள்ள நோயாளிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால், அவர்கள் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்படுகிறார்கள்.

யாராவது கொரோனாவால் உயிரிழந்தால் நமது மருத்துவர்களுக்கு கூடுதல் பணம் கிடைக்கும், அதனால் தான் மருத்துவர்கள் பலி எண்ணிக்கையை உயர்த்து கின்றனர். ஆனால், ஜெர்மனி உள்பட பல நாடுகளில் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் கொரோனாவால் உயிரிழந்தால், அவர்கள் இதயப்பிரச்சினை அல்லது புற்றுநோயால் இறந்ததாக அறிவிக்கப்படுகிறது.

அமெரிக்காவில் தேசியளவில் வெறும் 3 சதவீதம் பேர் மட்டுமே கொரோனா பாதிப்பால் அவசர சிகிச்சையில் சிகிச்சை பெறுகின்றனர்.

உலகில் எந்த நாட்டையும் விட அமெரிக்காவில் தான் அதிக கொரோனா சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது, அதனால் தான் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்கிறது.

தற்போது நாட்டில் இறப்பு எண்ணிக்கை குறைகிறது, மக்கள் குணமடைகின்றனர். அதற்கு நானும், எனது மனைவியும் உதாரணம் என டிரம்ப் கூறினார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com