உடல் எடை கூடிய டிரம்ப்...உடற்பயிற்சி செய்யுமாறு அறிவுறுத்திய டாக்டர்கள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பிற்கு உடல்நிலை பரிசோதனை நடத்தப்பட்டது.
டிரம்ப்
Published on

வாஷிங்டன்.

அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு வால்டர் ரீட் தேசிய ராணுவ மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. பரிசோதனை முடிவுகளை டிரம்பின் டாக்டர் சீன் பார்ப்பெல்லா வெளியிட்டார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:-

டிரம்புக்கு சிடி ஸ்கேன், புற்றுநோய் பரிசோதனை, இதய பரிசோதனைகள் உள்ளிட்ட பரிசோதனைகள் நடத்தப்பட்டன. 22 சிறப்பு மருத்துவர்கள் மேற்கொண்டனர்.

அதன் முடிவில், டிரம்ப் நல்ல உடல்நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. அவர் முப்படை தளபதியாக பணியாற்ற முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

டிரம்ப் 104 கிலோ எடையுடன் இருக்கிறார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த மருத்துவ பரிசோதனையின்போது இருந்ததை விட 6 கிலோ எடை அதிகரித்துள்ளது. அவரது டாக்டர்கள், உணவு கட்டுப்பாடு. எடை குறைப்பு, உடற்பயிற்சி ஆகியவை குறித்து வழிகாட்டுதல்களை மேற்கொள்ளுமாறு டிரம்ப்பிற்கு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com