"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்: டிரம்ப் சூசகம்

"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
"மோடியை சந்திக்கும்போது முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம்: டிரம்ப் சூசகம்
Published on

வாஷிங்டன்,

அரசு முறைப்பயணமாக வரும் 21 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை அமெரிக்காவுக்கு பிரதமர் மோடி செல்கிறார். இந்த சுற்றுப்பயனத்தின் போது டெக்சாஸின் ஹூஸ்டன் நகரில், இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் 'ஹவுடி, மோடி' நிகழ்ச்சியில் உரையாற்றுகிறார். 22 ஆம் தேதி நடைபெறும் இந்த நிகழ்வில் 50,000 க்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில், இந்திய-அமெரிக்கா இடையிலான வலிமையான நட்புறவை எடுத்துக்காட்டும் வகையில் சிறப்பு அழைப்பளராக அதிபர் டிரம்ப்பும் பங்கேற்கவுள்ளார்.

கடந்த ஜூன் மாதத்தில் ஜப்பானில் நடைபெற்ற ஜி-20 மாநாடு, ஆகஸ்ட் மாதத்தில் பிரான்ஸில் நடைபெற்ற ஜி-7 மாநாட்டுக்குப் பிறகு இரண்டு தலைவர்களும் பங்கேற்றும் மூன்றாவது நிகழ்வாக இந்த சந்திப்பு அமையவுள்ளது.

இதற்கிடையில், கலிபோர்னியாவிலிருந்து வாஷிங்டன் நகருக்குத் திரும்பும் வழியில் விமானப் படைத்தளத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பிரதமர் மோடியை சந்திக்கும்போது ஏதேனும் அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புள்ளதா? என டிரம்ப்பிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். இதற்கு பதிலளித்த டிரம்ப், அறிவிப்புகள் வெளியாகலாம். பிரதமர் மோடி நெருங்கிய நண்பர். அவருக்கும் எனக்கும் நல்ல நட்புறவு உள்ளது

என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com