டிரம்ப் முழு உடல் தகுதியுடன் உள்ளார் - வெள்ளை மாளிகை தகவல்


டிரம்ப் முழு உடல் தகுதியுடன் உள்ளார் - வெள்ளை மாளிகை தகவல்
x

கோப்புப்படம்

டிரம்பின் ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை சீராக உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சிறந்த உடல்நலத்துடன் இருக்கிறார் என்று வெள்ளை மாளிகை டாக்டர் கேப்டன் சீன் பார்பபெல்லா வழக்கமான உடல் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்புக்கு உடல் பரிசோதனை நடத்தப்பட்டது. அதன் முடிவுகளை வெள்ளை மாளிகை வெளியிட்டது.

அதில், டிரம்ப் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையில் இருப்பதாகவும், அமெரிக்க ஜனாதிபதி பொறுப்பையும், தலைமை தளபதி பொறுப்பையும் கவனிக்கும் அளவுக்கு உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. டிரம்புக்கு ஜூன் 14-ந் தேதி 79 வயது ஆகிறது. 2020-ம் ஆண்டு ஜனவரி மாதம் ஜனாதிபதியாக இருந்தபோது இருந்த உடல் எடையில் தற்போது 20 பவுண்டு எடை குறைந்துள்ளார்.

அவர் கண்புரை அறுவை சிகிச்சை செய்துள்ளார். கொழுப்புச்சத்து அளவில் முன்னேற்றம் காணப்படுகிறது. ரத்த அழுத்தம், இதய துடிப்பு ஆகியவை சீராக உள்ளன என்று கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story