கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயார்

கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயாராக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கிம் ஜாங் அன்னை மீண்டும் சந்திக்க டிரம்ப் தயார்
Published on

வாஷிங்டன்,

சிங்கப்பூரில் கடந்த ஜூன் மாதம் நடந்த முதல் உச்சி மாநாட்டுக்கு பிறகு, அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், வடகொரிய தலைவர் கிம் ஜாங் அன்னும் கடந்த மாத இறுதியில் வியட்நாமில் 2-வது முறையாக சந்தித்து பேசினர். ஆனால் எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. இதனால் அதிருப்தி அடைந்த வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்துவதற்கான பணிகளில் ஈடுபடுவதாக தகவல்கள் வெளியாகின. இந்த நிலையில், அணு ஆயுத பரவலை தடுக்க கிம் ஜாங் அன்னுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப் தயாராக இருப்பதாக அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் போல்டன் தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதனை அவர் கூறினார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், வியட்நாம் சந்திப்பின்போது டிரம்ப் பாதியிலேயே எழுந்து சென்றதற்கு பேச்சுவார்த்தை முறிந்ததாக பொருள் கிடையாது. அந்த சந்திப்பில் உடன்பாடு எட்டப்படாததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன என்றார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com