ஜோ பைடன் முன்னிலை வகிக்கும் விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்ப் மறுஎண்ணிக்கை கோரப்போவதாக தகவல்

வாக்கு எண்ணிக்கையில் இழுபறி நீடித்து வந்த விஸ்கான்சின் மாகாணத்தில் தற்போது ஜோ பைடன் முன்னிலை வகிக்கிறார்.
ஜோ பைடன் முன்னிலை வகிக்கும் விஸ்கான்சின் மாகாணத்தில் டிரம்ப் மறுஎண்ணிக்கை கோரப்போவதாக தகவல்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு முடிவடைந்த நிலையில், தற்பொது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. அதிபரை தேர்வு செய்ய அமெரிக்காவில் மெத்தம் உள்ள 50 மாநிலங்களில் 538 தேர்வாளர்கள் (பிரதிநிதிகள்) உள்ளனர். இவர்களில் 270 பேரின் வாக்குகளை பெறும் வேட்பாளரே அமெரிக்க அதிபராக தேர்வாக முடியும்.

தற்போதைய நிலவரப்படி ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜே பைடன் 237 வாக்குகளும், குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் 214 வாக்குகளும் பெற்றுள்ளனர். ஜோ பைடன் முன்னிலை பெற்றிருந்தாலும், இருவருக்கும் இடையிலான வாக்கு வித்தியாசம் குறைந்த அளவிலேயே உள்ளது.

இந்நிலையில் அமெரிக்க தேர்தலில் வெற்றியை நிர்ணயிக்கும் மாகாணங்களில் ஒன்றான விஸ்கான்ஸின் மாகாணத்தில் தற்போது ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். இந்நிலையில் குடியரசு கட்சியின் பிரச்சாரக்குழு தலைவர் பில் ஸ்டீஃபன் கூறுகையில், விஸ்கான்சின் மாகாணத்தில் வாக்கு எண்ணிக்கையின் போது பல இடங்களில் முறைகேடுகள் நடந்ததாக தகவல்கள் வந்துள்ளன. அவை முடிவுகளின் தன்மை குறித்து கடுமையான சந்தேகங்களை எழுப்புகின்றன என்று கூறியுள்ளார்.

மேலும் விஸ்கான்சின் மாகாண வாக்குகளை மறுஎண்ணிக்கை செய்வது குறித்து அதிபர் டிரம்ப் பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அங்குள்ள மாநில விதிகளின்படி, வேட்பாளர்கள் மறுஎண்ணிக்கை கோரும் பட்சத்தில், வாக்கு எண்ணிக்கையின் வித்தியாசம் 0.25 சதவீதத்திற்கு குறைவாக இருந்தால் மாநிலத்தின் செலவில் மறுஎண்ணிக்கை செய்யப்படும். அதே நேரம் வாக்கு வித்தியாசம் 1 சதவீதத்திற்கும் அதிகமாக இருந்தால் , வேட்பாளர்கள் செலவில் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com