வடகொரியா மற்றும் வெனிசூலா நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை; டிரம்ப் அறிவிப்பு

வடகொரியா நாட்டினர் அமெரிக்காவுக்குள் நுழைய அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தடை விதித்துள்ளார்.
வடகொரியா மற்றும் வெனிசூலா நாட்டினர் அமெரிக்காவிற்குள் நுழைய தடை; டிரம்ப் அறிவிப்பு
Published on

அவர் அறிவித்த நாடுகளில் பெருமளவில் முஸ்லிம்கள் அதிக எண்ணிக்கையில் வசித்து வருகின்றனர். அதனால், முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கையை அவர் மேற்கொள்கிறார் என குற்றச்சாட்டு எழுந்தது. அவரது அறிவிப்புக்கு எதிராக அந்நாட்டு நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.

இந்த நிலையில், வடகொரியா மற்றும் வெனிசூலா ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் அமெரிக்கா நாட்டுக்குள் நுழைய தடை விதிக்கப்படுகிறது என டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த புதிய கட்டுப்பாடானது வருகிற அக்டோபர் 18ந்தேதியில் இருந்து நடைமுறைக்கு வருகிறது.

முஸ்லிம்களுக்கு எதிரான தடை என்று எதிர்ப்பு வலுத்த நிலையில் டிரம்பின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அமெரிக்க அரசுடன் எந்த வகையிலும் வடகொரியா ஒத்துழைக்கவில்லை. அதனுடன் தகவல் பரிமாற்ற விசயங்களை நிறைவேற்றுவதில் இருந்தும் அந்நாடு அனைத்து வகையிலும் தோல்வி அடைந்துள்ளது என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com