

வாஷிங்டன்,
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் இணைந்து கடந்த பிப்ரவரி 28ம் தேதி தாக்குதல் நடத்தின. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக இஸ்ரேல், அரபு நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் மத்திய கிழக்கில் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
இதனிடையே, கிறிஸ்தவ கத்தோலிக்க திருச்சபைகளின் தலைவரான போப் 14ம் லியோ வாடிகனில் திரண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் முன் உரையாற்றினார். அப்போது, அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்பை போப் விமர்சித்தார். மேலும், மக்கள் மத்தியில் உரையாற்றிய போப், போர்கள் பிரிவினையை ஏற்படுத்தும். நம்பிக்கை அனைவரையும் இணைக்கும். தற்பெருமை, பணம் போதும். வலிமையை வெளிக்காட்டியதும்போதும். போர்களும் போதும். உண்மையான வலிமை வாழ்க்கையில் சேவை செய்வதில் வெளிப்பௌம். முட்டாள்தனமான போர்களில் இருந்து ஆட்சியாளர்கள் வெளியே வரவேண்டும். போர்களை நிறுத்துங்கள். இது அமைதிக்கான நேரம். மேஜைகளில் அமர்ந்து ஆயுதம், மரணங்களுக்கு திட்டமிடாலம் பேச்சுவார்த்தை மற்றும் மத்தியஸ்தத்தில் ஈடுபடுங்கள் என்று கூறினார்.
இந்நிலையில், போப் 14ம் லியோவின் கருத்துக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பதிலடி கொடுத்துள்ளார். தன்னை கிறிஸ்தவ மதக்கடவுள் இயேசு போல் சித்தரித்து தனது சமூகவலைதள பக்கத்தில் புகைப்படம் வெளியிட்ட டொனால்டு டிரம்ப், நான் போப் லியோவின் ரசிகன் அல்ல. போப் லியோ தனது பணியை சரிவர செய்வதாக நான் நினைக்கவில்லை. அவர் மிகவும் இடதுசாரி சிந்தனையாளராக உள்ளார். குற்றங்களில் போப் லியோ மிகவும் வலிமையற்றவர். வெளியுறவுக்கொள்கைகளிலும் அவர் மோசமானவர். ஈரான் அணு ஆயுதத்தை வைத்துக்கொள்ளட்டும் என நினைக்கும் போப் லியோ நமக்கு தேவையில்லை.
நான் வெள்ளைமாளிகையில் இல்லாவிட்டால் போப் லியோவும் வாடிகனில் இருக்கமாட்டார். போப் லியோ போப்புக்கான வேலைகளை மட்டும் பார்க்க வேண்டும். இடதுசாரி சிந்தனைகளை கைவிட்டு பொதுஅறிவுடன் சிந்த போப்பாக முயற்சிக்கவேண்டுமே தவிர அரசியல்வாதியாக மாற முயற்சிக்கக்கூடாது. அது போப் லியோவுக்கு பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும்’ இவ்வாறு தெரிவித்துள்ளார்.