எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களால் ‘ஜி-7’ மாநாட்டு இடத்தை மாற்றிய டிரம்ப்

எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களால் ‘ஜி-7’ மாநாட்டு இடத்தை ஜனாதிபதி டிரம்ப் மாற்றினார்.
எதிர்க்கட்சியினரின் விமர்சனங்களால் ‘ஜி-7’ மாநாட்டு இடத்தை மாற்றிய டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் மியாமி நகரில் ஜனாதிபதி டிரம்புக்கு சொந்தமாக, கோல்ப் மைதானங்களுடன் கூடிய பிரமாண்ட சொகுசு விடுதி உள்ளது.

8 ஆயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட சகல வசதிகளுடன் கூடிய இந்த சொகுசு விடுதியில் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் ஜி-7 மாநாடு நடைபெறும் என கடந்த 17-ந்தேதி வெள்ளை மாளிகை அறிவித்தது.

ஆனால், டிரம்ப் தனது சொந்த லாபத்துக்காக தன்னுடைய பதவியை தவறாக பயன்படுத்தி ஜி-7 மாநாட்டை அவரது சொகுசு விடுதியில் நடத்த திட்டமிட்டு இருப்பதாக எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியினர் வசைபாடினர். டிரம்பின் சொந்த கட்சியான குடியரசு கட்சியினர் சிலரும் அவரை விமர்சித்தனர்.

இந்த நிலையில் தொடர் விமர்சனங்களால் ஜி-7 மாநாட்டை மியாமி சொகுசு விடுதியில் நடத்தும் முடிவை டிரம்ப் கைவிட்டார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் ஜனநாயக கட்சியினர் மற்றும் ஊடகங்களின் விரோத போக்கு காரணமாக எனது யோசனையை மாற்றியமைக்கிறேன் என தெரிவித்துள்ளார்.



Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com