மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்; டொனால்டு டிரம்ப்


மேற்கு கரையை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன்; டொனால்டு டிரம்ப்
x
தினத்தந்தி 26 Sept 2025 1:11 PM IST (Updated: 26 Sept 2025 6:30 PM IST)
t-max-icont-min-icon

மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.

வாஷிங்டன்,

காசா முனை மற்றும் மேற்கு கரை என இரு பகுதிகளாக பாலஸ்தீனம் உள்ளது. அதேவேளை, மேற்கு கரையில் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளன.

இதனிடையே, மேற்கு கரையில் ஆக்கிரமிப்பு நடவடிக்கையை இஸ்ரேல் மேற்கொண்டு வருவதாக பல்வேறு நாடுகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. ஆனாலும், பல்வேறு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி மேற்கு கரையில் இஸ்ரேல் குடியிருப்புகளை அமைத்து வருகிறது.

இந்நிலையில், மேற்கு கரையின் பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மேற்கு கரையில் குடியிருப்புகளை அமைக்க இஸ்ரேல் மேற்க்கொண்டு வரும் நடவடிக்கை குறித்து வெள்ளைமாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் இடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அந்த கேள்விக்கு பதில் அளித்த டிரம்ப் கூறியதாவது, மேற்கு கரை பகுதிகளை இஸ்ரேலுடன் இணைக்க அனுமதிக்கமாட்டேன். இஸ்ரேல் இந்த நடவடிக்கை மேற்கொள்ள அனுமதிக்கமுடியாது. இதுவரை நடந்ததுபோதும். இந்த நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்க நேரம் வந்துவிட்டது

என்றார்.

1 More update

Next Story