அமெரிக்காவின் தாக்குதலில் சர்வதேச கொள்ளை கும்பல் தலைவன் சுட்டுக்கொலை

அவர் மீது நியூயார்க் கோர்ட்டில் பல வழக்குகள் நிலுவையில் இருந்ததாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் தாக்குதலில் சர்வதேச கொள்ளை கும்பல் தலைவன் சுட்டுக்கொலை
Published on

வாஷிங்டன்,

வெனிசுலா சிறைக் கும்பலான டிரென் டி அராகுவாவின் தலைவரான, நீனோ குரேரோ என்று அறியப்பட்ட ஹெக்டர் ருஸ்தென்போர்ட் குரேரோ புளோரசை அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் கொன்றதாக ஐனாதிபதி டொனால்டு தெரிவித்துள்ளார்.

முன்னதாக அமெரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஆள் கடத்தல், போதைப்பொருள் கடத்தல் மற்றும் கொலை வெறித்தாக்குதல்களில் ஈடுபட்டு வந்த 'டிரென் டி அராகுவா' என்ற சர்வதேச ஆயுதமேந்திய கும்பலை அமெரிக்கா பயங்கரவாத அமைப்பாக அறிவித்திருந்தது.

இக்கும்பலின் தலைமை தளபதியான வெனிசுலாவை சேர்ந்த ஹெக்டர் ருஸ்தென்போர்ட் குரேரோ புளோரஸ் மீது நியூயார்க் கோர்ட்டில் பல வழக்குகள் நிலுவையில் இருந்தன. இவர் பரவலாக "நீனோ குரேரோ" என்ற புனைப்பெயரால் அழைக்கப்படுகிறார்.

இந்த நிலையில், அமெரிக்க ராணுவம் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதலில் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார். இதுகுறித்து அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெனிசுலா நாட்டின் உதவியோடு, அமெரிக்க ராணுவத்தின் 'தெற்கு கமாண்ட்' பிரிவு நடத்திய அதிவேக துல்லியமான தாக்குதலில் 'டிரென் டி அராகுவா' கும்பலின் முக்கிய தலைவர் நீனோ குரேரோ கொல்லப்பட்டார்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com