ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது - டிரம்ப்

ஈரானுக்கு எதிரான போரில் அமெரிக்கா அணு ஆயுதங்களை பயன்படுத்தாது என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

வாஷிங்டன்,

ஈரானிய கடற்பகுதியை முற்றுகையிட்டுள்ள அமெரிக்க படையினர், அதை மீறி செல்லும் அந்த நாட்டு கப்பல்களை தாக்கி சிறைப்பிடித்து வருகின்றனர். அதேநேரம் ஹார்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்தை முடக்கியுள்ள ஈரான். அதை மீறும் கப்பல்களை தாக்கி வருகிறது. இதற்காக படகுகளை பயன்படுத்தி வருகிறது.

இதனிடையே ஹார்முஸ் நீரிணையில் வரும் ஈரான் படகுகளை தாக்கி அழிக்குமாறு அமெரிக்க படைகளுக்கு டிரம்ப் நேற்று முன் தினம் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருவதாக டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், போர் நிறுத்த காலத்தில் ஈரான் தங்களை ரீலோட் (Reload) செய்யக்கூடும் என்றும் அமைதி காப்பது போல தெரிந்தாலும் திரைமறைவில் தனது ஆயுத பலத்தை பெருக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடும் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் ஈரானின் ஒவ்வொரு அசைவையும் அமெரிக்கா உன்னிப்பாகக் கவனித்து வருகிறது என்றும், ஈரான் மீது முழுமையான நம்பிக்கையை நாங்கள் இன்னும் பெறவில்லை என்றும் அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஈரானுக்கு எதிரான போரில் அணு ஆயுதத்தைப் பயன்படுத்தப் போவதில்லை என டொனால்டு டிரம்ப் நேற்று தெரிவித்தார். வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “நாங்கள் ஏன் அணு ஆயுதத்தைப் பயன்படுத்த வேண்டும்? அது இல்லாமலேயே, மிகவும் வழக்கமான முறையில் அவர்களை நாங்கள் முற்றிலுமாக அழித்துவிடுவோம்.

ஈரானுடனான போரை முடிவுக்கு கொண்டுவர அவசரமில்லை. ஈரானுக்கு காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஹார்முஸ் நீரிணையில் நமக்கு கட்டுப்பாடு உள்ளது. ஹார்முஸை திறப்பதாக ஈரான் சொன்னது. பிரச்சினை தீரும் வரை ஈரான் தினசரி 50 கோடி டாலர் சம்பாதிப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. ஈரான் தலைமைத்துவத்தை இழந்துவிட்டது. அவர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக்கொள்கின்றனர். ஈரானின் ராணுவம் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுள்ளது. தடுப்பு அமைப்புகள் அழிந்துவிட்டன” என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com