டிக் டாக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க முடியாது; டிரம்ப்

டிக் டாக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிக் டாக் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட காலக்கெடுவை நீட்டிக்க முடியாது; டிரம்ப்
Published on

வாஷிங்டன்,

சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான டிக்-டாக் உட்பட பல்வேறு செயலிகள் தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகக் கூறி இந்தியா அவற்றுக்கு தடைவிதித்தது. அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்க உள்ளதாக ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி டிரம்ப் நிர்வாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். அந்த உத்தரவில், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு, வெளியுறவுக்கொள்கை மற்றும் பொருளாதாரத்துக்கு டிக்-டாக் அச்சுறுத்தலாக உள்ளது. அரசு ஊழியர்களின் இருப்பிடங்களை கண்காணிக்கவும், தகவல்களை சேகரித்து மிரட்டவும், உளவு பார்க்கவும் இந்த செயலியை சீனாவால் பயன்படுத்த முடியும். எனவே 45 நாட்களுக்குள் அமெரிக்க நிறுவனத்துக்கு அதை விற்க வேண்டும் எனக் கெடு விதித்திருந்தார். இதனால், செப்டம்பர் 15 ஆம் தேதிக்குள் அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் அல்லது வெளியேற வேண்டும் என்ற கட்டாயத்திற்கு டிக் டாக் தள்ளப்பட்டது.

டிக் டாக் நிறுவனத்தை வாங்குவதற்காக மைக்ரோசாப்ட் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தினாலும் இதுவரை எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில், டிக் டாக் நிறுவனத்தை விற்பனை செய்வதற்கான வழங்கப்போவது இல்லை என்ற காலக்கெடுவை மேலும் நீட்டிக்கப்போவது இல்லை என டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com