டிரம்ப் மாற்றி மாற்றி பேசுகிறார்: பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் விமர்சனம்

ஈரான் விவகாரத்தில் டிரம்ப் மாற்றி மாற்றி பேசுவதாக இமானுவேல் மேக்ரான் விமர்சித்துள்ளார்.
Photo Credit: AP
Photo Credit: AP
Published on

ஈரான் மீது அமெரிக்கா போர் தொடுத்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. போர் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்த்த நிலையில், மேலும் இரண்டு வாரங்களுக்கு தீவிர தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியுள்ளார். ஈரானை அழித்துவிட்டோம் என்று அதன் தனது படை வலிமையை இழந்துவிட்டது எனவும், விரைவில் ஈரானை விட்டு வெளியேறுவோம் என பேசி வந்த டிரம்ப் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், டிரம்ப் மாற்றி மாற்றி பேசுவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் கூறியுள்ளார். இது தொடர்பாக இமானுவேல் மேக்ரான் கூறியிருப்பதாவது: "மத்திய கிழக்கு நாடுகள் விவாகாரத்தில் நீங்கள் சீரியஸாக இருக்க வேண்டும். நீங்கள் சீரியஸாக இருக்க விரும்பினால் நீங்கள் பேசியதற்கு எதிராகவே ஒவ்வொரு நாளும் மாற்றி பேசக் கூடாது டிரம்ப் அதிகம் பேசுகிறார். அவரது கருத்துக்கள் நேர்த்தியாகவும் இல்லை, தரமானவையாகவும் இல்லை” என்றார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com