அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி-பிரான்சுக்கு டிரம்ப் மிரட்டல்


அமைதி வாரியத்தில் இணையாவிட்டால் 200 சதவீதம் வரி-பிரான்சுக்கு டிரம்ப் மிரட்டல்
x
தினத்தந்தி 21 Jan 2026 7:39 AM IST (Updated: 21 Jan 2026 12:55 PM IST)
t-max-icont-min-icon

மேக்ரானை விரும்பவில்லை. ஏனென்றால் அவர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார் என்று டிரம்ப் கூறினார்.

வாஷிங்டன்,

இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார். இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத்தலைவர்களுக்கு அழைப்பு விடுத்து வருகிறார். ஐக்கிய நாடுகள் சபைக்கு மாற்றாக கருதப்படும் இந்த அமைதி வாரியத்தில் இணைய பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் மறுப்பு தெரிவித்தார். இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் மியாமில் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் அமைதி வாரியத்தில் பிரான்ஸ் இணையாவிட்டால் 200 சதவீதம் வரிவிதிப்பதாக மிரட்டல் விடுத்தார்.

அவர் கூறுகையில், “யாரும் மேக்ரானை விரும்பவில்லை. ஏனென்றால் அவர் பதவியில் இருந்து விரைவில் நீக்கப்படுவார். பிரான்ஸ் தயாரிப்பு பொருட்களான ஒயின் உள்ளிட்டவற்றுக்கு 200 சதவீதம் வரி விதிப்பேன். அப்போது தானாக வந்து அமைதி வாரியத்தில் இணைவார்” என்றார். மேலும் இந்தியா பாகிஸ்தான் விவகாரம் குறித்து மீண்டும் பேசிய டிரம்ப், ”அணுஆயுத நாடுகளான இந்தியா-பாகிஸ்தான் போரை நிறுத்தி கோடிக்கணக்கான மக்களின் உயிரை காப்பாற்றினேன் என்பது அனைவரும் அறிந்ததே. 8 போர்களை நிறுத்தியுள்ளதை தொடர்ந்து விரைவில் மேலும் ஒரு போரை நிறுத்த ஆவலாக உள்ளேன்” என்றார்.

1 More update

Next Story