காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறிய கனடா மீது கூடுதல் வரி.. டிரம்ப் மிரட்டல்

காடுகளை சரியாக பராமரிக்காததால் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று டிரம்ப் குற்றம் சாட்டி உள்ளார்.
காட்டுத்தீயை கட்டுப்படுத்த தவறிய கனடா மீது கூடுதல் வரி.. டிரம்ப் மிரட்டல்
Published on

வாஷிங்டன்,

கனடா நாட்டில் தற்போது நூற்றுக்கணக்கான இடங்களில் காட்டுத்தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனால் அங்கிருந்து வரும் புகை, அமெரிக்காவின் பல மாகாணங்களைச் சூழ்ந்துள்ளதால் அமெரிக்க மக்கள் வீடுகளுக்குள் முடங்கும் அவலம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி டிரம்ப்

இதற்கு கனடா அரசின் அலட்சியமே காரணம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். காடுகளை சரியாக பராமரிக்காததால் அமெரிக்காவுக்கு கோடிக்கணக்கில் பொருளாதார இழப்பு ஏற்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ள டிரம்ப், இதற்கு பரிகாரமாக கனடா பொருட்களுக்கு கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என மிரட்டியுள்ளார்.

பருவநிலை மாற்றம்

ஆனால், பருவநிலை மாற்றமே இதற்கு காரணம் என்றும், 2020 முதல் காடுகள் பாதுகாப்புக்காக ரூ.58 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளதாகவும் கனடா விளக்கமளித்துள்ளது. டிரம்ப்பின் இந்த வரி மிரட்டலால் இரு நாடுகளிடையேயான வர்த்தக உறவில் பெரும் விரிசல் ஏற்பட்டுள்ளது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com