

வாஷிங்டன்,
வெள்ளை மாளிகையில் இன்று நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டிரம்ப் பங்கேற்க உள்ளார்.
இந்து மதப்பண்டிகையான தீபாவளி இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டு தீபாவளி பண்டிகை நாளை மறுதினம் (10ம் தேதி - ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் இன்று தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. வெள்ளை மாளிகையின் ஓவல் அலுவலக அறையில் நடைபெறும் தீபாவளி கொண்டாட்டத்தில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் கலந்துகொள்ள உள்ளார்.
முன்னதாக ஜார்ஜ் புஜ் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த கால கட்டத்தில் 2003ம் ஆண்டு முதல் வெள்ளை மாளிகையில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து 2009ம் ஆண்டு வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்தில் அப்போதைய ஜனாதிபதி ஒபாமா கலந்துகொண்டார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற தீபாவளி பண்டிகையில் கலந்துகொண்ட முதல் ஜனாதிபதி என்ற பெருமையை ஒபாமா பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.