அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப்

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார்.
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி; டொனால்டு டிரம்ப்
Published on

 வாஷிங்டன்,

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் கடந்த ஜனவரி மாதம் பொறுப்பேற்றார். இதையடுத்து, பல்வேறு நாடுகள் மீது சரமாரியாக இறக்குமதி வரி விதிப்பை அறிவித்த டிரம்ப் வர்த்தக போருக்கு வழிவகுத்தார்.

இந்தியா, சீனா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு கூடுதல் வரியை அறிவித்தார். இதனால், சர்வதேச அளவில் பெரும் தாக்கம் ஏற்பட்டது.

குறிப்பாக, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை நிறுத்துமாறு இந்தியாவுக்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்து வருகிறார். மேலும், கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதால் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளார். இதனால், இந்தியா, அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மருந்து பொருட்களுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். அதேவேளை, மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவில் தொழிற்சாலைகள் அமைத்திருந்தால் அந்த நிறுவனங்களுக்கு இந்த வரி பொருந்தாது என்றும் அவர் அறிவித்துள்ளார்.

மேலும், சமையலறை உபகரணங்கள், பாத்ரூம் உபகரணங்கள் மீது 30 சதவீத இறக்குமதி வரியும் பர்னிச்சர் பொருட்கள் மீது 25 சதவீத இறக்குமதியும் விதிக்கப்படுவதாக டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த கூடுதல் இறக்குமதி வரி விதிப்பு வரும் 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. டிரம்ப்பின் இந்த அறிவிப்பால் இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் பெரும் பாதிப்பை சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com