டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் சட்ட விரோதமானது - வக்கீல்கள் கருத்து

டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் சட்ட விரோதமானது என்று அவரது வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் சட்ட விரோதமானது - வக்கீல்கள் கருத்து
Published on


* குடியுரிமை திருத்த சட்டம் தேவையற்றது; இதை இந்திய அரசு கொண்டு வந்திருப்பதின் நோக்கத்தை புரிந்துகொள்ள முடியவில்லை. இருப்பினும் இது அந்த நாட்டின் உள்நாட்டு விவகாரம் என்று வங்காளதேச பிரதமர் ஷேக் ஹசினா ஒரு பேட்டியில் கூறி உள்ளார்.

* அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதான பதவி நீக்க தீர்மானம் சட்ட விரோதமானது, இது அமெரிக்க மக்களின் உரிமைகள் மீதான தாக்குதல் என்று டிரம்ப் வக்கீல்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

* வெனிசூலா நாட்டில் அரசியல் குழப்பம் நிலவுகிறது. இந்த நிலையில், அமெரிக்காவுடனும், எதிர்க்கட்சி தலைவர் ஜூவான் வாய்டோவுடனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயார் என வெனிசூலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ அறிவித்துள்ளார்.

* நேபாளத்தில் பனிச்சரிவில் சிக்கிய 150-க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டனர். எனினும் தென்கொரியாவை சேர்ந்த 4 பேர், உள்நாட்டினர் 3 பேர் என மொத்தம் 7 பேர் காணாமல் போய் விட்டனர். அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

* சீன மக்களை கொரோனா வைரஸ் தாக்கி வருகிறது. இது சுவாச பிரச்சினை மூலம் உயிரிழப்பை ஏற்படுத்தி விடுகிறது. வூகன் நகரில் 17 பேரை இந்த வைரஸ் தாக்கி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் சீனாவில் கொரோனா வைரஸ் தாக்கியவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. 2 பேர் பலியாகி இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

* ஹாங்காங்கில் சட்டசபை அருகே அமைந்துள்ள சாட்டர் கார்டனில் ஆயிரக்கணக்கானோர் நேற்று கூடினர். அவர்கள் தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி முழக்கங் களை எழுப்பினர். சீன கம்யூனிஸ்டு கட்சியை புறக்கணிக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com