டிரம்பின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா நிர்வாகத்தில் குழப்பமா?

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் பொருளாதார ஆலோசகர் கேரி கோன் ராஜினாமா செய்கிறார். டிரம்ப் நிர்வாகத்தில் பதவி விலகும் 23–வது நபர், இவர்.
டிரம்பின் பொருளாதார ஆலோசகர் ராஜினாமா நிர்வாகத்தில் குழப்பமா?
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் பொருளாதார ஆலோசகர் கேரி கோன் (வயது 57). இவர் கோல்ட்மேன் சச்ஸ் வங்கியின் தலைவர் பதவி வகித்தவர். தாராளமயமாக்கப்பட்ட வர்த்தகத்துக்கு ஆதரவாளராக திகழ்கிறார்.

கடந்த ஆண்டு, ஜனாதிபதி டிரம்ப் அங்கு வரி சீர்திருத்தங்கள் கொண்டு வந்ததில் முக்கிய பங்கு வகித்தவர், கேரி கோன்தான்.

ஆனாலும் டிரம்பும், இவரும் ஒரு போதும் நெருக்கமாக இருந்தது கிடையாது என சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் கேரி கோன் திடீரென ராஜினாமா செய்யப்போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். இது குறித்து அவர் ஒரு அறிக்கை வெளியிட்டு உள்ளார். அதில் அவர் தனது பதவி விலகலுக்கு என்று குறிப்பிட்ட காரணம் எதையும் குறிப்பிடவில்லை.

அமெரிக்க நாட்டுக்காக உழைப்பதற்கு எனக்கு கிடைத்த வாய்ப்பை ஒரு கவுரவமாக நான் கருதுகிறேன். அமெரிக்க மக்களுக்கு நல்ல பல பலன்கள் அளிக்கத்தக்க விதத்தில் வளர்ச்சிக்கு உகந்த பொருளாதார கொள்கைகளை கொண்டுவர உழைத்தேன். குறிப்பாக வரலாற்று சிறப்புமிக்க வரி சீர்திருத்தங்கள் கொண்டுவருவதில் முக்கிய பங்கு ஆற்றினேன் என குறிப்பிட்டு உள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 20ந் தேதி பதவி ஏற்றதைத் தொடர்ந்து, அங்கு நிர்வாகத்தை மாற்றி அமைத்தார்.

அதைத் தொடர்ந்து பதவி விலகும் 23வது முக்கிய நபர் என்ற பெயரை இந்த கேரி கோன் பெறுகிறார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com