கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு பின் அதிகரிக்கும் டிரம்ப்பின் செல்வாக்கு

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பிறகு அவருடைய செல்வாக்கு அதிகரித்து வருகிறது.
கிரிமினல் குற்றச்சாட்டுகளுக்கு பின் அதிகரிக்கும் டிரம்ப்பின் செல்வாக்கு
Published on

நியூயார்க்,

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்ட பிறகு அவருடைய செல்வாக்கு அதிகரித்து வருகிறது.

2024 அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட திட்டமிட்டுள்ள டிரம்ப், தேர்தல் பிரச்சார செலவுகளுக்காக கடந்த சில மாதங்களாக நிதி திரட்டி வருகிறார். 2023 ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டில் ஒரு கோடியே 44 லட்சம் டாலர் நன்கொடை மூலம் திரட்டியுள்ளார்.

ஏப்ரல் 4 அன்று நியூயார்க் கோர்ட்டில் டிரம்ப் மீது பொய் கணக்குகள் வழக்கில் கிரிமினல் குற்றசாட்டு பதிவு செய்யப்பட்டு, அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. ஆனால் இதைத் தொடர்ந்து டிரம்ப்பின் செல்வாக்கு சரிவதற்கு பதிலாக வெகுவாக அதிகரித்துள்ளது. அரசியல் பார்வையாளர்களை இது ஆச்சரியப்படுத்தியுள்ளது.

அவர் மீது கிரிமினல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட உள்ளதாக மார்ச் 30-ல் செய்தி வெளியான பிறகு, அடுத்த 24 மணி நேரத்தில் அவரின் தேர்தல் நிதிக்கு 40 லட்சம் டாலர் நன்கொடை குவிந்தது. கடந்த மூன்று வாரத்தில் மட்டும் ஒன்ரை கோடி டாலர் நிதி குவிந்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com