டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை - அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு

டிரம்பின் நீண்ட கால ஆலோசகரான ரோஜர் ஸ்டோனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோனுக்கு 3 ஆண்டுகள் சிறைதண்டனை - அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
Published on


* ஆப்கானிஸ்தான் உள்நாட்டு போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் தலீபான்கள் மற்றும் அமெரிக்க அரசு இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாவதற்கான சூழல் உருவாகி உள்ளது. அதன் பலனாக ஆப்கானிஸ்தானில் ஒரு வாரத்துக்கு தற்காலிக சண்டை நிறுத்தத்தை அமல்படுத்த தலீபான்கள் ஒப்புக்கொண்டுள்ளதாகவும், இன்று (சனிக்கிழமை) முதல் அது அமலுக்கு வருவதாகவும் அந்த நாட்டு தேசிய பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது.

* நைஜீரியாவில் லாகோஸ் நகருக்கு கடலில் சென்று கொண்டிருந்த லிபியா நாட்டு சரக்கு கப்பல் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். பின்னர் கப்பலில் இருந்த மாலுமிகள் 10 பேரை அவர்கள் கடத்தி சென்றனர்.

* 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷியாவின் தலையீடு குறித்து நடந்த விசாரணையில் பொய்யான தகவல்களை கூறிய குற்றச்சாட்டில் ஜனாதிபதி டிரம்பின் நீண்ட கால ஆலோசகர் ரோஜர் ஸ்டோன் என்பவருக்கு 3 ஆண்டுகள் 4 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்து அமெரிக்க கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

* அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று, தொழில்நுட்ப கோளாறு காரணமாக நடுவானில் திணறியது. இதையடுத்து, விமானி விமானத்தை மீண்டும் விமான நிலையத்துக்கு திருப்பி தரையிறக்க முயன்றபோது, எதிர்பாராத விதமாக தரையில் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 3 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com