அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் புகைப்படம்

புதிய 100 டாலர் நோட்டுகளில் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் புகைப்படம்
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினம் ஜூலை 4, 2026 அன்று கொண்டாடப்படவுள்ளது. "Freedom 250" என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக விழா ஒருங்கிணைப்பு சிறப்புக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு நாணயங்கள், அஞ்சல் தலைகள் மற்றும் ராணுவ அணிவகுப்புகள் போன்ற பிரம்மாண்ட நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை அமெரிக்கா அடைந்துள்ள முன்னேற்றம், ஜனநாயக மதிப்புகள் மற்றும் எதிர்கால இலக்குகள் போன்றவற்றை முன்னிலைப் படுத்துவதே இந்த விழாவின் நோக்கமாக இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், அமெரிக்காவின் 250-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அதிபர் டிரம்ப்பின் புகைப்படம் மற்றும் அவரது கையெழுத்துடன் கூடிய சிறப்பு பாஸ்போர்ட்டுகள் அறிமுகம் செய்யப்பட உள்ளன. வரையறுக்கப்பட்ட பதிப்பு முறையில் வெளியிடப்படும் இது, வாஷிங்டன் பாஸ்போர்ட் ஏஜென்சியில் மட்டுமே கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புதிய 100 டாலர் நோட்டுகளில் டிரம்ப்பின் கையெழுத்து இடம்பெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Daily Thanthi
www.dailythanthi.com