இறந்தது மகிழ்ச்சிதான்: எப்.பி.ஐ முன்னாள் தலைவர் மறைவு பற்றி டிரம்ப் சர்ச்சை பேச்சு

அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவியதாக எழுந்த குற்றாச்சாட்டு தொடர்பாக முல்லர் விசாரணை மேற்கொண்டு இருந்தார்.
இறந்தது மகிழ்ச்சிதான்: எப்.பி.ஐ முன்னாள் தலைவர் மறைவு பற்றி டிரம்ப் சர்ச்சை பேச்சு
Published on

அமெரிக்காவின் மத்திய புலனாய்வு அமைப்பு எப்.பிஐ. இதன் தலைவராக இருந்தவர் ராபர்ட் முல்லர் III. அமெரிக்காவின் முதன்மையான விசாரணை அமைப்பாக இருந்த எப்.பிஐயை, இரட்டை கோபுர தாக்குதலுக்கு பிறகாக பயங்கரவாத எதிர்ப்பு பிரிவாகவும் இவரே மாற்றினார்.

அமெரிக்க அதிபர் டிரம்பின் பிரசாரத்திற்கு ரஷ்யா உதவியதாக எழுந்த குற்றாச்சாட்டு தொடர்பாகவும் முல்லரே விசாரணை மேற்கொண்டார். இதனால், முல்லர் மீது வெறுப்பை கட்டி வந்தார் டிரம்ப் .

இந்த நிலையில், 81 வயதான ராபர்ட் முல்லர் நேற்று உயிரிழந்தார். அவரது மரணம் தொடர்பாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இருக்க கூடிய பதிவு பரபரப்பை கிளப்பியுள்ளது. டிரம்ப் தனது பதிவில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-

ராபர்ட் முல்லர் சற்று நேரத்திற்கு முன்புதான் இறந்தார். நல்லது, அவர் இறந்துவிட்டார் என்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அப்பாவி மக்களை இனி அவரால் காயப்படுத்த முடியாது" என்று பதிவிட்டுள்ளார். டிரம்பின் இந்த கருத்து தொடர்பாக எப்.பி.ஐ உடனடியாக எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.

X

Daily Thanthi
www.dailythanthi.com