

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரல் 90 டாலருக்கு கீழ் சரிந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதத்துக்குப் பிறகு முதல் முறையாக இந்த அளவுக்கு விலை குறைந்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றம் முடிவுக்கு வரலாம் என்ற எதிர்பார்ப்பு காரணமாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், ஈரான் மீது மீண்டும் ராணுவத் தாக்குதல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்படாது என்று கூறிய விலையில், விலை கடுமையான வீழ்ச்சியை கண்டுள்ளது. ஈரானுடனான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாகவும் டிரம்ப் கூறியிருந்தார். இதனால் அமெரிக்கா - ஈரான் இடையிலான போர் முடிவுக்கு வரலாம் என்று முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவைச் சந்தித்துள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர். கடந்த அக்டோபர் 30-ந்தேதி ஒரு பேரல் 118 டாலராக உயர்ந்திருந்த பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை, தற்போது கணிசமாகக் குறைந்துள்ளது.
இருப்பினும், ஹார்முஸ் ஜலசந்தி பகுதியில் கப்பல் போக்குவரத்து தொடர்பான அச்சுறுத்தல்கள் மற்றும் மத்திய கிழக்கில் நீடிக்கும் பதற்றம் காரணமாக எண்ணெய் சந்தையில் தொடர்ந்து நிச்சயமற்ற நிலை நிலவுகிறது. தற்போது விலை வீழ்ச்சி நீடிக்குமா? அல்லது மீண்டும் எகிறுமா? என்று சர்வதேச முதலீட்டாளர்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள்.