“என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்” - ஜனநாயக கட்சியினர் மீது டிரம்ப் ஆவேச தாக்கு

என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல் என ஜனநாயக கட்சியினரை, டிரம்ப் ஆவேசமாக விமர்சித்துள்ளார்.
“என்னை பதவியை விட்டு நீக்க முயற்சிப்பது வரலாற்று ஊழல்” - ஜனநாயக கட்சியினர் மீது டிரம்ப் ஆவேச தாக்கு
Published on

வாஷிங்டன்,

அமெரிக்காவில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஜனாதிபதி தேர்தலில் டிரம்பை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடென் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த நிலையில், ஜோ பிடெனுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், உக்ரைனில் பணியாற்றிய அவரது மகனுக்கு எதிராக விசாரணை நடத்த வேண்டும் என்று அந்த நாட்டின் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியை டிரம்ப் மிரட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் டிரம்பை பதவியை விட்டு நீக்குவதற்கான விசாரணையை அமெரிக்க நாடாளுமன்றத்தில் (பிரதிநிதிகள் சபை) ஜனநாயக கட்சி தொடங்கி உள்ளது.

இந்த விசாரணை வேடிக்கையானது என டிரம்ப் ஏற்கனவே கருத்து தெரிவித்திருந்த நிலையில், தன்னை பதவி நீக்க கோரும் ஜனநாயக கட்சியினரின் முயற்சி அமெரிக்க அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய ஊழல் என கூறி ஆவேசப்பட்டுள்ளார். இது குறித்து அவர் வீடியோ மூலம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:-

இப்போது நடப்பது அமெரிக்க அரசியல் வரலாற்றின் மிகப்பெரிய ஊழல். ஜனநாயக கட்சியினர் உங்கள் துப்பாக்கிகளை எடுத்து செல்ல விரும்புகிறார்கள். உங்கள் சுகாதாரத்தையும், உங்கள் வாக்குகளையும், உங்கள் சுதந்திரத்தையும் பறிக்க நினைக்கிறார்கள். நான் மக்களின் நலனுக்காக போராடுவதால் அவர்கள் (ஜனநாயக கட்சியினர்) என்னை தடுக்க விரும்புகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com