துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை

துருக்கியில் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை

துருக்கியில் உள்ள இஸ்தான்புல் நீதிமன்றம் 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.
Published on

இஸ்தான்புல்

துருக்கியால் 2016-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆட்சி கவிழ்ப்பில் அங்குள்ள பத்திரிகையாளர்களுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டது.

இந்த வழக்கில் இஸ்தான்புல் நீதிமன்றம் இன்று 25 பத்திரிகையாளர்களுக்கு ஏழரை ஆண்டு சிறைத்தண்டனை வழங்கியது.

பத்திரிகையாளர்கள் 23 பேர் ஆயுதமேந்திய பயங்கரவாதக் குழு உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டனர். மேலும் இரண்டு பேர் சில குற்றச்சாட்டுக்களில் தொடர்பு இருப்பதாக டோக்கன் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது.

அனைத்து பத்திரிகையாளர்களும் அமெரிக்காவைச் சார்ந்த போதகர் பெத்தூலா குலென், குழுவுக்கு நெருக்கமான ஊடகங்களுக்கு வேலை செய்பவர்கள் ஆவார்கள்.

X

Daily Thanthi
www.dailythanthi.com