

இஸ்தான்புல்,
கிழக்கு ஆசியா, தென்மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ள நாடு துருக்கி. இந்நாட்டின் டியர்பகிர் மாகாணத்தில் இருந்து திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க உறவினர்கள் மினி பஸ்சில் முஸ் நகருக்கு இன்று சென்றுகொண்டிருந்தனர். அந்த மினி பஸ்சில் 18 பேர் பயணித்தனர்.
இந்நிலையில், டியர்பகிர் மாகாணத்தில் உள்ள நெடுஞ்சாலையில் சென்றபோது மினி பஸ்சின் டயர் வெடித்து சிதறியது. இதில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள், குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்தனர். மேலும், 9 பேர் படுகாயமடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். மேலும்,இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.