துருக்கியில் உயரும் கொரோனா பாதிப்பு: புதிதாக 27,188 பேருக்கு தொற்று!

துருக்கி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,188 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அங்காரா,

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் துருக்கி தற்போது 6-வது இடத்தில் உள்ளது.

இந்நிலையில், துருக்கியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 27,188 பேர் கொரோனா வைரசால் பாதிப்பு அடைந்துள்ளனர். இதன்மூலம் பாதிப்பு அடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 70,66,688 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 206 பேர் பலியானதால், அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 63 ஆயிரத்து 372 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து 65 லட்சத்து 22 ஆயிரத்து 435 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா பாதிப்புடன் 4,80,881 பேர் சிகிச்சை பெற்று வருவதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

துருக்கியில் தற்போது சீனாவின் சினோவாக் தடுப்பூசியின் அவசரகால பயன்பாட்டிற்கு அதிகாரிகள் ஒப்புதல் அளிக்கப்பட்டு அங்குள்ள மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது. 53.55 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் முதல் தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர். 43.81 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் தங்கள் இரண்டாவது டோஸ் மருந்தை பெற்றுள்ளனர். துருக்கி இதுவரை பூஸ்டர் டோஸ்களுடன் சேர்த்து 108.3 மில்லியனுக்கும் அதிகமான மருந்துகள் செலுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com