துருக்கியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி


துருக்கியில் 6 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: 3 போலீஸ் அதிகாரிகளும் பலி
x

கோப்புப்படம்

போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

அங்காரா,

துருக்கியின் மேற்கு யலோவா மாகாணத்தில் புத்தாண்டு கொண்டாட்டம் களைகட்ட தொடங்கி உள்ளது. இதற்காக வணிக வளாகம், சுற்றுலா தலங்களில் மக்கள் குவிந்து வருகின்றனர். இதற்கிடையே அங்குள்ள எல்மாலி நகரில் உள்ள ஒரு வீட்டில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், மக்கள் கூட்டம் நிறைந்த இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த அவர்கள் திட்டமிட்டு இருப்பதாகவும் உளவுத்துறைக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை போலீசார் முற்றுகையிட்டனர். அப்போது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 3 போலீஸ் அதிகாரிகள் பலியாகினர். மேலும் 9 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் நடத்திய பதிலடி தாக்குதலில் 6 பயங்கரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டனர்.

இஸ்தான்புல்லில் இருந்து 62 மைல் (100 கிலோமீட்டர்) தொலைவில் உள்ள எல்மாலிக் கிராமத்தில் ஏழு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த இந்த நடவடிக்கையில் ஆறு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், ஐந்து பேர் கைது செய்யப்பட்டதாகவும் துருக்கிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story