

அங்காரா
கடந்த இரு தினங்களாக தான் மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக அமைந்தது என்றாமல் உடனடியாக மோதலை முடிவிற்கு கொண்டு வரும் தீர்வுகள் ஏதும் கிட்டவில்லை என்றார் அவர்.
தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மத்தியில் பேசிய போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இப்பயணத்தின்போது ஏற்படுத்தப்பட்ட தொடர்புகள் பயனுள்ளதாக இருந்தன; முன்பை விட அதிக முனைப்புடன் இப்பிரதேசத்தின் அமைதிக்கும், நிலைப்புத்தன்மைக்குமான நமது முயற்சிகளை தொடர்ந்து செய்வோம் என்றார் அவர்.
பயணத்திற்கான பலன்களை அறிய சிறிது காலமாகும். ஆனால் அதிகாரி ஒருவர் இப்பிரச்சினைத் தீர்வதற்கு சவூதி அரேபியாவின் பங்களிப்பு அவசியம் என்றார்.
ஒரு சில விஷயங்களில் நல்ல முன்னேற்றம் நாம் காண முடிகிறது. வருகின்ற நாட்களில் மேலும் சில உறுதியான முன்னேற்றங்களை நாம் காண இயலும் என்றும் அந்த பெயர் சொல்லாத விரும்பாத அதிகாரி தெரிவித்தார்.