

பியாங்யாங்,
கொரியப் போர் கடந்த 1953-ம் ஆண்டு தற்காலிகமாக முடிந்தாலும், சர்வ தேசச் சட்டப்படி இரு நாடுகளும் இன்னும் போரில்தான் நீடிக்கின்றன. இந்த சூழலில், தென் கொரியாவைத் தன் முதன்மை எதிரியாக அறிவித் துள்ள வடகொரியா, கடந்த மார்ச் முதலே எல்லையில் ராட்சத சுவர்களை எழுப்பி வந்தது.
இதன் தொடர்ச்சியாக, அதிபர் கிம் ஜாங் அன் தன் ராணுவ தளபதிகளின் அவசரக் கூட்டத்தைக் கூட்டினார். 2011-ல் அவர் பத வியேற்ற பிறகு நடந்த முதல் கூட்டுக்கூட்டம் இதுவாகும். கூட்டத்தில், தென் கொரியா எல்லையை யாரும் ஊடுருவ முடியாத "தகர்க்க முடியாத கோட்டையாக" மாற்ற கிம் ஜாங் அன் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். உக்ரைன் போரை மனதில் வைத்து, டிரோன் மற்றும் நவீனத் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப ராணுவப் பயிற்சிகளை மாற்றவும் அவர் ஆணையிட்டார். இதனால் எல்லையில் போர் மேகம் சூழ்ந்துள்ளது.