மீசைய முறுக்கு..! ஓசியில சரக்கு..!

கிழக்கு லண்டனில் உள்ள ஜானி வாக்கர் சலூன், வாடிக்கையாளர்களை வித்தியாசமான முறையில் கவர்ந்து வருகிறது.
மீசைய முறுக்கு..! ஓசியில சரக்கு..!
Published on

முடி திருத்தி கொள்ளவும், முக அலங்காரம் செய்து கொள்ளவும் வரும் வாடிக்கையாளர்களுக்கு மது வழங்கப்படுகிறது. சலூன் கடைக்காரர்களின் சாமர்த்திய முயற்சி என்பதால், மதுவை மீசை முடியுடன் குடிக்க கொடுக்கிறார்கள். அது எப்படி மீசை முடியுடன் மது குடிக்க முடியும் என்கிறீர்களா...?

எலுமிச்சையும், இஞ்சியும் கலந்த மெழுகை மீசையில் தடவி விடுகிறார்கள். ஒவ்வொரு முறை மதுவை அருந்தும்போதும் மீசையில் இருந்து மெழுகு உள்ளே செல்லும்போதும், வித்தியாசமான அனுபவத்தைத் தருகிறதாம்.

இது 100 சதவீதம் தேனீக்களின் மெழுகால் தயாரிக்கப்படுவதால் எந்தவிதக் கெடுதலும் இல்லை. மிளகு, எலுமிச்சை, இஞ்சி என்ற மூன்று சுவைகளில் மெழுகை ஜானிவாக்கர் நிறுவனம் அளித்து வருகிறது.

இந்தச் சோதனை முயற்சி வெற்றி பெற்றால் உலகம் முழுவதும் மீசையைத் தம்ளருக்குள் விட்டுக் குடித்துக் கொண்டிருப்பார்கள் மனிதர்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com