ஆப்கானிஸ்தான்: பள்ளிக்கூடம் அருகே அடுத்தடுத்து குண்டு வெடிப்பு - 5 பேர் படுகாயம்

பள்ளிக்கூடம் அருகே அடுத்தடுத்த நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர்.
Image Courtesy: AFP
Image Courtesy: AFP
Published on: 

காபுல்,

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலின் மேற்கு நகரில் உள்ள உயர்நிலை பள்ளிக்கூடம் அருகே இன்று காலை பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து இரண்டு குண்டுகள் வெடித்தது. அதேபோன்று டியூசன் சென்டர் அமைந்துள்ள பகுதியிலும் குண்டு வெடித்தது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் 5 படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆப்கானிஸ்தானில் தலீபான்கள் ஆட்சி நடைபெற்று வரும் சூழ்நிலையில் ஐ.எஸ். போன்ற அமைப்புகள் அவ்வபோது தாக்குதல் நடத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

X

Follow us on Google
Daily Thanthi
www.dailythanthi.com