

இந்த சம்பவம் தீவிரவாதத்தின் கோழை செயல் என நியூயார்க் நகர மேயர் பில் டீ பிளேசியோ கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்பும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், அமெரிக்காவின் கொலராடோ நகரில் உள்ள வால்மார்ட் வணிக வளாகத்தில் இன்று துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த சம்பவத்தில் 2 பேர் கொல்லப்பட்டு உள்ளனர். பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இதுபற்றி தாம்ப்டன் போலீஸ் அதிகாரிகள் டுவிட்டரில், 9900 கிராண்ட் சாலையில் உள்ள வால்மார்டில் துப்பாக்கி சூடு நடந்துள்ளது. இந்த பகுதியில் இருந்து மக்கள் தொலைவில் இருங்கள் என தெரிவித்துள்ளனர்.
இதனை தொடர்ந்து சில ஆம்புலன்சுகள் சம்பவ பகுதிக்கு சென்றுள்ளன என உள்ளூர் செய்தி சேனல்கள் தெரிவித்துள்ளன.