

இந்த டெல்டா வைரசுக்கு எதிராக 2 டோஸ் பைசர் அல்லது அஸ்ட்ரா ஜெனேகா தடுப்பூசிகள் பலன் அளிக்கும் என்று யு.எஸ். நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் பத்திரிகையில் வெளியிடப்பட்ட ஆய்வு தெரிவிக்கிறது.டெல்டா வைரசுக்கு எதிராக பைசர் தடுப்பூசி 88 சதவீதமும், ஆல்பா வைரசுக்கு எதிராக 93.7 சதவீதமும் பலன் தரும் என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அதே நேரத்தில் அஸ்ட்ராஜெனேகா தடுப்பூசி, டெல்டா வைரசுக்கு எதிராக 67 சதவீதமும், ஆல்பாவுக்கு எதிராக 74.5 சதவீதமும் பலன் அளிக்கும் என தெரிய வந்துள்ளது.