அடுத்தடுத்து இரண்டு முறை ஏற்பட்ட நிலநடுக்கத்தால் அதிர்ந்த ஆப்கானிஸ்தான்

அரை மணி நேரத்திற்குள் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

காபூல் [ஆப்கானிஸ்தான்],

ஆப்கானிஸ்தானின் பைசாபாத்தில் இன்று நள்ளிரவு இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக நில அதிர்வுக்கான தேசிய மையம் (NCS) தெரிவித்துள்ளது.

முதல் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.4. ஆக பதிவானது. இது நள்ளிரவு 12.28 மணியளவில் 80 கி.மீ. ஆழத்தில், பைசபாத்தில் இருந்து 126 கி.மீ. கிழக்கு தொலைவில் ஏற்பட்டது.

அதேசமயம், இரண்டாவது நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.8 ஆக பதிவானது. இது நள்ளிரவு 12.55 மணிக்கு 100 கி.மீ. ஆழத்தில் பைசாபாத்தின் 100 கி.மீ தென் கிழக்கில் நிகழ்ந்தது.

அடுத்தடுத்து அரைமணி நேரத்திற்குள் ஏற்பட்ட இந்த இரண்டு நிலநடுக்கங்களால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். இந்நிலையில் நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த உறுதியான தகவல் எதுவும் வெளியாகவில்லை.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com