மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து இரண்டு முறை நிலநடுக்கம்... மக்கள் அச்சம்

மியான்மரில் ஒரே நாளில் அடுத்தடுத்து 3.8, 4.3 ரிக்டர் அளவில் இரண்டு முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது
நைபியிடவ்,
மியான்மரில் இன்று காலை திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. காலை 8.44 மணியளவில் (இந்திய நேரப்படி) ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.3 ஆக பதிவாகி உள்ளது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
மியான்மரில் 80 கிலோமீட்டர் ஆழத்தை மையமாக கொண்டு இந்த நிலநடுக்கம் 18.80 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 94.86 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக அதிகாலை 3.56 மணியளவில் ரிக்டரில் 3.8 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நில அதிர்வால் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் வெளியாகவில்லை.
Related Tags :
Next Story