

* அமெரிக்காவில் 2016 மற்றும் 2017 ஆண்டுகளில் இந்திய தகவல் தொழில்நுட்ப வல்லுனர்கள்தான் அதிகபட்சம் எச்-1பி விசாக்களை பெற்று உள்ளனர். எச்-1பி விசாக்கள் வழங்கப்பட்டதில் 2016-ல் 74.2 சதவீதமும், 2017-ல் 75.6 சதவீதமும் இந்தியர்கள் பெற்று உள்ளனர்.
* ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்டு உள்ள 7 இந்திய என்ஜினீயர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு விடுவார்கள் என்ற உறுதியை இந்தியாவுக்கான புதிய தூதர் வினய் குமாரிடம், அந்த நாட்டின் வெளியுறவு மந்திரி சலாகுதீன் ரப்பானி அளித்து உள்ளார்.
* லெபனான் நாடாளுமன்ற தேர்தலில் ஹிஸ்புல்லா அணியினர் முன்னிலை பெற்று உள்ளனர்.
* செர்பியா நிதி மந்திரி டுசன் வுஜோவிக், தனிப்பட்ட காரணங்களையொட்டி பதவி விலகி உள்ளார்.
* ஜெர்மனியில் ஒரு பயணிகள் ரெயிலும், ஒரு சரக்கு ரெயிலும் மோதிக்கொண்டதில் 2 பேர் உயிரிழந்தனர். பலர் காயம் அடைந்து உள்ளனர்.
* சிரியாவில் நடந்த ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் ரஷிய விமானிகள் 2 பேர் பலியாகினர்.