

டோக்கியோ
ஜப்பானை தாக்கிய டால்பின் புயலால் 5 பேர் காயம் அடைந்தனர்.
ஜப்பான் நாட்டின் தெற்கு தீவுப்பகுதியான ஒகினவாவை டால்பின் புயல் கடுமையாக தாக்கியுள்ளது. இதனால், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்களில் வசிப்பவர்களுக்கு தேவையான மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.
இந்த புயலால், ஜப்பானின் ககோஷிமா மாகாணத்தில் உள்ள ஒகினவா தீவு, ஆமமி தீவு ஆகியவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளன. இதனை தொடர்ந்து, புயலால் அதிகம் தாக்கப்பட கூடிய துறைமுகங்கள் மூடப்பட்டன. பள்ளிகள் மற்றும் சுற்றுலா தலங்களும் பாதுகாப்பை முன்னிட்டு மூடப்பட்டு உள்ளன.
புயலின்போது, பலத்த காற்று வீசியது. இதில், தவறி விழுந்து 3 பேர் காயமடைந்தனர். தவிர 2 பேர் காயமடைந்தனர். இதனால், மொத்தம் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் வயது முதிர்ந்தவர்கள் ஆவர். இதனால், மணிக்கு 162 கி.மீ. வேகத்தில் தொடர்ந்து பலத்த காற்று வீசியது.
எனினும், சில சமயங்களில் மணிக்கு 216 கி.மீ. வேகத்திலும் காற்று வீசியது என ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த ஜூலை 26-ந்தேதி பருவகால காற்றழுத்தம் என்ற வகையில் உருவாகி பின்னர் ஜூலை 28-ந்தேதி வலுவான சூறாவளியாக டால்பின் உருவானது.
இந்த புயல், சீனாவை நோக்கி நகரும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்நாட்டின் கிழக்கே ஜெஜியாங் மாகாணத்தில் உள்ள கடற்கரையில் புயல் இன்று கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.