ஹாங்காங்கை தாக்கிய புயல்; 400 விமானங்கள் ரத்து

80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
ஹாங்காங்,
சீனாவின் தன்னாட்சி பெற்ற மாகாணமாக ஹாங்காங் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், தென்சீன கடல் பகுதியில் புயல் உருவானது. அந்த புயல் இன்று ஹாங்காங்கை தாக்கியது.
ஹாங்காங், சீனாவின் கவுங்கட் மாகாணத்தில் உள்ள நகரங்களையும் புயல் தாக்கியது. இதில், நகரின் பல்வேறு பகுதிகளில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. புயல் காற்றுடன் கனமழையும் பெய்து வருகிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புயலால் ஹாங்காங்கில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. ஹாங்காங்கில் 400க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அவதியடைந்துள்ளனர்.
Related Tags :
Next Story






