சவுதி அரேபியாவில் பெண் ஓட்டுனர்களை பணியமர்த்தும் கால் டாக்ஸி நிறுவனங்கள்

சவுதியில் நடந்து வரும் சமூக சீர்திருத்தங்கள் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக மாறியுள்ளது. அந்த வகையில் கால் டாக்சி டிரைவர்களாக பெண்கள் மாறி வருகின்றனர். #Uber #Careem #SaudiArabia
சவுதி அரேபியாவில் பெண் ஓட்டுனர்களை பணியமர்த்தும் கால் டாக்ஸி நிறுவனங்கள்
Published on

துபாய்

சவுதி அரேபிய மன்னர் சல்மானும், அவரது மகன் முகமது பின் சல்மானும் பல்வேறு பொருளாதார மற்றும் சமூக சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களது மாற்றங்கள் பெண்களுக்கு முன்னுரிமை கொடுப்பதாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் பெண்களுக்கு கார் ஓட்டுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.

பெண்களுக்கு ஓட்டுனர் உரிமமும் விரைவில் வழங்கப்படும் என தெரிகிறது. இதன்படி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் முதல் பெண்கள் முறைப்படி உரிமம் பெற்று கார் ஓட்டலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. லாரி, பைக் ஓட்டவும் டிசம்பர் மாதம் அனுமதி அளிக்கப்பட்டது.

இதன் அடுத்தகட்ட நடவடிக்கையாக கால் டாக்ஸி நிறுவனங்கள், பெண் ஓட்டுனர்களை பணியமர்த்தும் நடவடிக்கைகளை துவங்கியுள்ளன. உபேர் மற்றும் துபாயை சேர்ந்த கரீம் ஆகிய கால் டாக்ஸி நிறுவனங்கள் இந்த முயற்சியை துவங்கியுள்ளன.

இதன் மூலம் சுமார் 10 ஆயிரம் பெண் ஓட்டுநர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிகிறது. சவுதி அரேபியாவை பொருத்தவரையில் கால் டாக்ஸி வாடிக்கையாளர்களில் 80 சதவீதம் பேர் பெண்களே. எனவே இந்த திட்டம் பெரிய அளவில் வெற்றி பெறும் என நம்பப்படுகிறது.

#Uber #Careem #SaudiArabia #femaledrivers

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com