உகாண்டா தேர்தலில் வெற்றி: தொடர்ந்து 7வது முறையாக அதிபராகும் யோவரி முசவேனி...!


உகாண்டா தேர்தலில் வெற்றி: தொடர்ந்து 7வது முறையாக அதிபராகும் யோவரி முசவேனி...!
x

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா.

கம்பாலா,

கிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு உகாண்டா. இந்நாட்டின் அதிபராக செயல்பட்டு வருபவர் யோவரி முசவேனி (வயது 81).

இவர் தேசிய எதிர்ப்பு இயக்கம் என்ற கட்சியின் தலைவர் ஆவார். யோவரி முசவேனி கடந்த 1986ம் ஆண்டு முதல் 40 ஆண்டுகளாக உகாண்டாவின் அதிபராக செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், உகாண்டா அதிபர் தேர்தல் நேற்று முன் தினம் நடைபெற்றது. இதில், யோவரி முசவேனி மீண்டும் போட்டியிட்டார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவரான பாபி ஒயின் போட்டியிட்டார். இந்த தேர்தலில் யோவரி முசவேனி வெற்றிபெற்றதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

யோவரி முசவேனி 71.65 சதவீத வாக்குகள் வெற்றிபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தொடர்ந்து 7வது முறையாக யோவரி முசவேனி உகாண்டா அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேவேளை தேர்தலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் பாபி ஒயின் குற்றஞ்சாட்டி வருகிறார்.

1 More update

Next Story